முகப்பு
செய்திகள்

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்!

ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்...

Updated On : 30 ஜனவரி 2025, 3:54 pm IST
பகிர்:

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியளவில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற பாராட்டுகளைப் பெற்றவர் ரவி வர்மன். தமிழில் ஆட்டோகிராஃப், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, அந்நியன், பொன்னியின் செல்வன் ஹிந்தியில் ஃபார்ஃபி, தமாஷா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் (ASC) உறுப்பினராக ரவி வர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் இணைவது சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

காரணம், இந்த சங்கத்தில் இருப்பவர்களே ஆஸ்கர் விருதுகளைப் பெற உள்ள ஒளிப்பதிவாளர்களின் தரத்தை மதிப்பீடு செய்வார்கள். அதில், ரவி வர்மன் தேர்தெடுக்கப்பட்டுள்ளது பெரிய கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பதிவிட்ட ரவி வர்மன், “என் தொழிலை நிச்சயமற்ற நிலையிலிருந்தே தொடங்கினேன். இன்று இருக்கும் இடத்திற்கும், இனிமேலும் என் வாழ்க்கைக்கான உண்மையான அர்தத்தையும் நோக்கத்தையும் காண கவனமாக திட்டமிட்டு வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.