முகப்பு
செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்து....

Updated On : 3 ஜூலை 2025, 1:55 pm IST
பகிர்:

திரையரங்குகளில் இந்த வாரம் 6 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(ஜூலை 4) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஃபீனிக்ஸ் படம் நாளை(ஜூலை 4) வெளியாகிறது.

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் - சித்தார்த் நடித்துள்ள 3 பிஎச்கே திரைப்படம் நாளை வெளியாகிறது.

Advertisement

Advertisement

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள பறந்து போ படம் நாளை வெளியாகிறது.

அருண் பாண்டியன் தயாரிப்பில் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அஃகேனம் திரைப்படம் நாளை வெளியாகிறது.

முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா நடிப்பில் சுந்தர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள அனுக்கிரகன் திரைப்படம் நாளை வெளியாகிறது.

முருகசாமி இயக்கத்தில் லிஸி ஆண்டனி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள குயிலி நாளை வெளியாகிறது.

இப்படங்களைத்தவிர பிற மொழிப் படங்களான தம்முடு, மெட்ரோ, ஜங்கர் ஜீராசிக் வேர்ல்டு ரீ பெர்த் படங்கள் நாளை வெளியாகிறது.

summary

6 Tamil films are releasing in theaters this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments