முகப்பு
செய்திகள்

கார்த்தி - 29 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் கார்த்தி - இயக்குநர் தமிழ் படத்தின் போஸ்டர் வெளியீடு...

Updated On : 10 ஜூலை, 2025 at 11:37 AM
கார்த்தி - 29
பகிர்:
Updated On : 10 ஜூலை, 2025 at 11:22 AM

நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான பெயர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெளியீட்டில் தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Advertisement

Updated On : 10 ஜூலை, 2025 at 11:24 AM

இந்த நிலையில், பீரியட் கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்திற்கு, ‘மார்ஷல்’ எனப் பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் கடலோர கிராமம் காட்டப்பட்டுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். நடிகர்கள் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

summary

actor karthi's 29th film movie titled as marshal directed by tamizh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.