எல்ஐகே படத்தின் போஸ்டர். 
செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே: டீசர் அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படத்தின் டீசர் வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் டீசர் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான பாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு கோவையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளையொட்டி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசர் வரும் ஆக. 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான்: செல்லூர் ராஜு

கடைசிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பல்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் பதில்!

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT