FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பான் இந்திய படத்தைத் தயாரித்து நடிக்கும் ரவி மோகன்!

ரவி மோகனின் புதிய படம்...

9 ஜூன் 2025, 1:53 pm IST
பகிர்:

நடிகர் ரவி மோகன் தானே தயாரித்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.

இதில், ஜீனி மற்றும் கராத்தே பாபு படங்கள் இந்தாண்டே வெளியாகவுள்ளன. அடுத்ததாக, பிரபல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

தற்போது, ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறாராம்.

இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்த்தன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உள்பட 4 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம். படத்திற்கு, ‘ப்ரோகோட்’ (brocode) எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments