கூலியில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்: அமீர் கான்
கூலி படம் குறித்து அமீர் கான் பேசியுள்ளார்...
கூலி திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து அமீர் கான் பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அமீர் கான், “கூலி திரைப்படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துடன் நாகர்ஜுனா, அமீர் கான் என நட்சத்திர பட்டாங்களே இணைந்துள்ளதால் இப்படம் பெரிய வணிகத்தைச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதையும் அமீர் கான் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.