முகப்பு
செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் மாதவன்?

ராஜமௌலி இயக்கிவரும் புதிய படத்தில் நடிகர் மாதவன் இணைந்துள்ளதாகத் தகவல்...

Updated On : 12 ஜூன், 2025 at 9:29 AM
பகிர்:

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் நடிகர் மாதவன் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிஷாவில் நடைபெற்ற முதல்கட்ட படிப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்ததாக, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்த நிலையில், நடிகர் மாதவன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இப்படத்தில் பிருத்விராஜ் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.