தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருகிறாராம்....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறாராம். அண்மையில், படத்தின் பூஜை முடிந்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை (martial arts) கற்று வருகிறாராம்.
படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ளதால் கதாபாத்திரம் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக லோகேஷ் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுன்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.