முகப்பு
செய்திகள்

3 பிஎச்கே டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி!

சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 24 ஜூன் 2025, 7:52 pm IST
3 பிஎச்கே பட போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்ரீகணேஷ்.
பகிர்:

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக '3 பிஎச்கே' படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்பட சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று, படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பிஎச்கே திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி டிரைலர், பாடல்கள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments