மெட்ராஸ் மேட்னி போஸ்டர். 
செய்திகள்

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

DIN

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜுக்கு சிறை!

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

கரூர் பலி: பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது - திருமா | செய்திகள்: சில வரிகளில் | 30.9.25

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

SCROLL FOR NEXT