தாமதமாக வெளியான சப்தம்!
சப்தம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது குறித்து...
சப்தம் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன், முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாதிக்கப்பட்டது பேய்களா? ரசிகர்களா? சப்தம் - திரை விமர்சனம்!
ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம் பிப். 28 ஆம் தேதி (நேற்று) வெளியீடாகத் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில பிரச்னைகளால் மார்ச் 1 ஆம் தேதிதான் திரைக்கு வந்தது.