முகப்பு
செய்திகள்

மார்கோ: தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் வழங்க தணிக்கை வாரியம் மறுப்பு!

மார்கோ திரைப்படத்திற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் வழங்க தணிக்கை வாரியம் மறுப்பு.

Updated On : 5 மார்ச் 2025, 5:28 pm IST
மார்கோ
பகிர்:

உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமம் வழங்க தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’ திரைப்படம் அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படம் என்ற குறிப்புடன் கடந்த டிச. 20 தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘ஏ’ சான்றிதழ் பெற்று மலையாளம் உள்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த பிப். 14 அன்று வெளியானது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மார்கோ திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமம் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளியாகும் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் இருந்து ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் பெறப்படவேண்டும்.

ஆனால், மார்கோ படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் (சிபிஎஃப்ஐ) மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிபிஎஃப்ஐ அதிகாரி துஃபாலி, ”குழந்தைகள் அதிக வன்முறை உள்ள படங்களை பார்க்காமல் இருக்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படத்தை ஓடிடி-யில் ஒளிபரப்பவும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளோம். தற்போது ஓடிடி-யில் வெளியாகும் படங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தணிக்கை வாரியத்திற்கு இல்லை” என்று அவர் கூறினார்.

மேலும், ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்து தனிப்பட்ட புகார்கள் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்படுவதாகவும் இதுய்தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரி தெரிவித்தார்.

மார்கோ படத்தின் தயாரிப்பாளர் ஷரீஃப் அகமது பேசுகையில், “மாறவேண்டியது சினிமா அல்ல. நமது பார்வைதான். மார்கோ அதிக வன்முறையுடன் வெளியான முதல் படமில்லை. படத்தைத் திரையிடுவதற்கு முன்பு திரையரங்குகளில் அனைத்து எச்சரிக்கைகளும் சரியாகக் காட்டப்பட்டன.

மாநிலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. இனிமேல் வன்முறையை ஊக்குவிக்கும் திரைப்படங்களைத் தயாரிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments