முகப்பு
செய்திகள்

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

பராசக்தி படத்தில் பாசில் ஜோசஃப்...

Updated On : 13 மார்ச் 2025, 5:59 pm IST
பாசில் ஜோசஃப்
பகிர்:

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

இங்கு, மதுரை ரயில் நிலையம் சார்ந்த காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பாசில் ஜோசஃப் இப்படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்து வரும் வேளையில் பாசில் ஜோசஃப், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நடிகர்கள் பராசக்தியில் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments