முகப்பு
செய்திகள்

விஷ்ணு விஷால்-ராம்குமார் கூட்டணி: 2ஆவது போஸ்டர்!

ராட்சசன் இயக்குநருடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படத்தின் ஆவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மார்ச் 2025, 2:57 pm IST
விஷ்ணு விஷாலின் புதிய பட போஸ்டர்.
பகிர்:

ராட்சசன் இயக்குநருடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படத்தின் 2-ஆவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி  ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

Advertisement

Advertisement

கடந்தாண்டு ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி  மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்தப் படத்தை சதய்ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது விஷ்ணு விஷாலின் 21ஆவது படமாக உருவாகிவருகிறது.

கடைசிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படத்துக்கு இரண்டு உலகம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.