விக்ரம் - 63 படத்தின் பெயர் இதுவா?
விக்ரம் - 63 அப்டேட்...
நடிகர் விக்ரம் - இயக்குநர் மடோன் அஸ்வின் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.
தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
தற்போது, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்குகிறார். இது விக்ரமின் 63-வது படமாக உருவாகிறது.
வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘வீரமே ஜெயம்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தனுஷுக்கு வில்லனாகும் ஜெயராம்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.