முகப்பு
செய்திகள்

ஜீவாவின் புதிய படம்!

ஜீவா படத்தின் பூஜை குறித்து...

Updated On : 2 மே 2025, 11:08 am IST
பகிர்:

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிளாக் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியன் படமும் தோல்விப் படமானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜீவா தன் 45-வது படத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஃபலிமி (falimy) படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்பப் பின்னணி கதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments