கார்த்தி நடிப்பில் ஹிட் - 4!
ஹிட் - 4 படத்தில் நடிகர் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது....
நடிகர் கார்த்தி ஹிட் - 4 படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நடிகர் நானி நடித்த ஹிட் - 3 திரைப்படம் நேற்று (மே. 1) திரையரங்குகளில் வெளியானது.
கிரைம் திரில்லர் பாணியில் வன்முறைக் காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படமாக உருவான இது, கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், முதல் நாள் வசூலாக ரூ. 44 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாகத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்களிடம் ஆவல் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்த சிறுத்தை, தீரன் ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றதால் ஹிட் - 4 படமும் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விஜே சித்து இயக்கி, நடிக்கும் படம் அறிவிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.