ரூ. 50 கோடி வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி!
டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் குறித்து...
சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதல் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை புக் மை ஷோ (book my show) ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலைக் கடத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சசிகுமார் நாயகனாக நடித்த படங்களிலேயே இதுவே அதிக வசூலைக் கொடுத்த படமென்பதால் சசி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதையும் படிக்க: தாதாசாகேப் பால்கேவாக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.