முகப்பு
செய்திகள்

தக் லைஃப் - இரண்டாவது பாடல் அறிவிப்பு!

Updated On : 20 மே, 2025 at 5:21 AM
தக் லைஃப் போஸ்டர்
பகிர்:

நடிகர் கமல்ஹாசனின் புதிய படமான ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் இரண்டாவது பாடலான சுகர் பேபி பாடல் நாளை(மே 21) வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கசாப்பு கடையா வச்சுருக்கேன்? ’பெரிய பாய்’ என்ற பெயருக்கு ரஹ்மான் ரியாக்‌ஷன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments