கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக....
நடிகர் கவினின் கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிஸ் திரைப்படம் ஜென் மார்டின் இசையமைப்பில் ரொமாரியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்க, கவின் நாயகனாகவும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், இந்தப் படத்தில் விடிவி கணேஷ், தேவயானி, கௌசல்யா, ஆர்ஜே விஜய், கல்யாண் மாஸ்டர் மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கிஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி வரும் நவ. 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற கிஸ் திரைப்படம், ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!
The OTT release date of actor Kavin's film Kiss has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.