அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?
வசூலைக் குவிக்கும் பிரணவ் மோகன்லால் திரைப்படம்...
பிரணவ் மோகன்லாலின் டீயஸ் ஈரே திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த ஹாரர் திரைப்படம் டீயஸ் ஈரே. நாயகன் பிரணவ் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் பேய்க்கதையுமாக உருவான இப்படம் கடந்த அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பும் கவனம் பெற்றதால் ஹாரர் தருணங்கள் ரசிகர்களிடம் பயத்தைக் கொடுத்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டீயஸ் ஈரே வெளியான ஒரே வாரத்திற்கு ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பல திரைகளில் இப்படத்திற்கான இரவுக்காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேலும் வசூலிக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: நான் மண் அல்ல… மலை! காந்தா டிரைலர்!
pranav mohanlal's dies irae movie collected morethan Rs. 50 crores
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.