விஸ்மயா மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம்!
விஸ்மயா மோகன்லாலின் அடுத்த திரைப்படம்...
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை விஸ்மயா மோகன்லால் நடிப்பில் உருவான துடக்கம் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியை அடைந்துள்ளது.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கிய இப்படம் கடந்த ஆக.7 ஆம் தேதி வெளியானது.
Advertisement
Advertisement
சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவான இதில் ஆபத்திலிருந்து தப்பிக்கும் நாயகியாக ஆக்ஷன் கலந்த தோற்றத்தில் விஸ்மயா நன்றாக நடித்திருந்ததாக விமர்சனங்கள் வந்தன. தற்போது, இப்படம் ஓடிடியிலும் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், விஸ்மயா மோகன்லால் அடுத்ததாக கியூப் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அருண் போஸ் இயக்க, ரதீனா சுஹாஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.
An announcement has been released regarding a new film in which actor Mohanlal's daughter, Vismaya, will star as the female lead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.