3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் அகண்டா - 2!
3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 திரைப்படம்.
பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 தாண்டவம் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்கு மொழிப் படம் அகண்டா. இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.
இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதிக வசூலை அள்ளியது. ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
அகண்டா முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே அகண்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். அகண்டா இரண்டாம் பாகத்துக்கும் தமன் இசையமைக்கிறார்.
அகண்டா -2 தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வாரணாசியால் இந்தியாவே பெருமைப்படும்: மகேஷ் பாபு
Balakrishna's Akhanda - 2 movie to be released in 3D technology.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.