ரஜினிகாந்த் வெளியிடும்..! டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் படத்தின் டைட்டில் டீசர்!
அபிஷன் ஜீவிந் நாயகனாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவது குறித்து...
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சசி குமார் நாயகனாக நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இப்படம், கடந்த மே மாதம் வெளியான நிலையில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
Advertisement
Advertisement
எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை நாளை (நவ. 22) மாலை 6 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அபிஷன் ஜீவிந் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!
Superstar Rajinikanth will release the title teaser of the new film starring Tourist Family director Abhishan Jeevinth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.