டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் பட டைட்டில் டீசர்! ரஜினிகாந்த் வெளியிட்டார்!
அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது...
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சசி குமார் நாயகனாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூலம் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கும் இப்படத்தை எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், “வித் லவ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (நவ. 21) வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஜன நாயகன் இசை வெளியீட்டுத் தேதி!
Superstar Rajinikanth has released the title teaser of the film, which will mark the debut of ‘Tourist Family’ director Abhishan Jeevinth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.