முகப்பு
செய்திகள்

ஆஸ்கருக்கு தேர்வான...! ஹோம்பவுண்ட் படம் ஓடிடியில் வெளியானது!

“ஹோம்பவுண்ட்” திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது...

Updated On : 22 நவம்பர் 2025, 2:41 pm IST
பகிர்:

ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான “ஹோம்பவுண்ட்” எனும் இந்தி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

‘மசான்’ திரைப்படத்தின் இயக்குநர் நீரஜ் கய்வான் இயக்கத்தில் உருவான புதிய படம் “ஹோம்பவுண்ட்”. இப்படத்தில், இஷான் கட்டார், ஜான்வி கபூர், விஷால் ஜோத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவான இப்படம் இந்தியா சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கத் தேர்வானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஹோம்பவுண்ட் திரைப்படம் நேற்று (நவ. 21) நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் திரையிடப்பட்ட இந்தப் படம், 9 நிமிட கைதட்டல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் அல்ல; தீர விசாரிப்பதே மெய்! - ‘அவிஹிதம்’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments