பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்த வாரத்திற்கு 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. 50 நாள்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 50 வது நாளான இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரத் தகுதியற்ற நபர்கள் குறித்த வாக்கெடுப்பு போட்டியாளர்களிடையே நடைபெற்றது.
இதில் ஒரு போட்டியாளர் இருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அனைவரும் தேர்வு செய்த பிறகு, வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து பிக் பாஸ் அறிவிப்பார்.
Advertisement
Advertisement
அந்தவகையில் இம்முறை சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் மனங்களைக் கவர்ந்து அதிக வாக்குகளைப் பெறுபவர் போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வார இறுதியில் அனுப்பப்படுவார்.
இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ்: போட்டியாளர்களை விடியோ மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள்!
bigg boss 9 tamil 8th week nomination list
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.