ஜி.வி. பிரகாஷ் குமார் குரலில் வெளியான பராசக்தி பட பாடல்!
பராசக்தி படத்தின் புதிய பாடல் வெளியானது தொடர்பாக...
பராசக்தி படத்தின் ரத்னமாலா பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகிவரும் ‘பராசக்தி’ திரைப்படம், வரும் 2026 ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
மெட்ராஸ் மாகாணத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போர் போராட்டங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இப்படத்தின் “அடியே அலையே” என்ற பாடல் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் பராசக்தி படத்தின் இரண்டாவது பாடலான ”ரத்னமாலா” பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
The song Ratnamala from the movie Parasakthi has been released online and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.