எப்போதும் பாட்ஷா! ரஜினியை முத்தமிட்ட ரன்வீர் சிங் - வைரல் விடியோ!
நடிகர் ரஜினிகாந்தின் கையில் ரன்வீர் சிங் முத்தமிட்ட விடியோ இணையத்தில் வைரல்...
நடிகர் ரஜினிகாந்தின் கையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முத்தமிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று (நவ. 28) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விருதை, நடிகர் ரஜினிக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வழங்கினார். அப்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், விருது பெற்றதும் மேடையில் நின்றிருந்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் கைகொடுத்து மரியாதை தெரிவித்தார். இறுதியாக, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கைகொடுத்தபோது ரஜினிகாந்தின் கையில் அவர் முத்தமிட்டார்.
இந்த விடியோ, இணையத்தில் வைரலான நிலையில் இந்த நிகழ்வு நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தில் வரும் காட்சியை ரீ-கிரியேட் செய்ததுபோல் இருக்கின்றது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அம்பேத்கர் பெயரை ஒலிபரப்பாத பிக் பாஸ்! வலுக்கும் கண்டனம்!
A video of famous Bollywood actor Ranveer Singh kissing actor Rajinikanth's hand is going viral on the internet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.