முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 9: பார்வையாளர்களைக் கவர்ந்த பிக் பாஸ் பள்ளிக்கூடம்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பள்ளிக் கூட டாஸ்க் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Updated On : 29 நவம்பர் 2025, 4:04 pm IST
பிக் பாஸ் பள்ளிக்கூடத்திலிருந்து... - படம் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பள்ளிக் கூட டாஸ்க் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதற்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த டாஸ்ட்க்குகளை விட பள்ளிக் கூட டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 56 வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுக்க உண்டு உறைவிடப் பள்ளியாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது.

Advertisement

Advertisement

இதில் போட்டியாளர்கள் பலரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் வேடமேற்று போட்டியை விளையாடினர். பார்வதி, கனி திரு, அமித் பர்கவ் ஆகியோர் ஆசிரியர்களாகவும் ப்ரஜின் தலைமை ஆசிரியராகவும் வேடமேற்றிருந்தனர். இசைக் கலைஞர் எஃப்.ஜே., பள்ளிப் பணியாளராகவும் நடித்திருந்தார். எஞ்சிய போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாக சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்திருந்தனர்.

ஆசிரியர்களுடன் மாணவர்கள் - படம் - எக்ஸ்

இதில், வியானா செய்த செயல்கள் பலரை வெறுப்பேற்றும் விதமாக இருந்தாலும் விக்கல்ஸ் விக்ரம், சுபிக்‌ஷா, கமருதீன் போன்றோர் மாணவர்களாக தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்ததாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிக் பாஸ் பள்ளிக்கூடம் - படம் - எக்ஸ்

தமிழ் ஆசிரியையாக கனி திரு மாணவர்களை நன்முறையில் வழிநடத்தியதும், திருக்குறள் பாட வைத்ததும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. வார்டனாக உள்ள விஜே பார்வதி, பல முறை அழுது தனிப்பட்ட முறையில் போட்டியை திசைதிருப்பினார்.

இதனால், வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி வியானா மற்றும் விஜே பார்வதியின் செயல்களை கண்டிப்பாரா? சிறப்பாக பங்களிப்பளித்ததாக யாருடைய நடிப்பை பாராட்டப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் பெயர் எழுத, படிக்க கற்றுக்கொண்ட ரம்யா!

summary

Bigg boss 9 bb school task

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.