புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!
புதிய கார் பந்தயத்திற்கு தயாராகும் அஜித்...
நடிகர் அஜித், நரேன் கார்த்திகேயன் இருவரும் இணைந்து கார் பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.
அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.
Advertisement
Advertisement
சில நாள்களுக்கு முன் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்தனர்.
இந்த நிலையில், இந்தாண்டு டிசம்பர் மாதம் மலேசியாவில் துவங்கவுள்ள ஆசியன் லீ மேன்ஸ் சீரியஸ் தொடருக்கு அஜித் குமாருடன் அவரது அணியைச் சேர்ந்த பிரபல ஃபார்முலா - 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித்துடன் நரேன் இணைந்து ரேஸ் செய்யவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!
actor ajith kumar racing team joined with narain karthikeyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.