FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!

பிரிட்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

10 செப்டம்பர் 2026, 10:21 pm IST
விஜய் \ அஜித் குமார்
பகிர்:

பிரிட்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இன்று (செப். 10) பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் சனியன்று (செப் 12) தொடங்கி வைக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் ’லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் இருவரும் இரு துருவங்களாக இருந்த நிலையில், அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவிருப்பது இருவரின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

summary

Chief Minister Vijay to flag off the car race featuring Ajith Kumar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments