எனது அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் வந்ததில் மகிழ்ச்சி: அஜித் குமார்
முதல்வர் விஜய் பிரிட்டன் கார் பந்தயத்திற்கு வரவிருப்பது பற்றி அஜித் குமார் பேசியுள்ளார்.
முதல்வர் விஜய் பிரிட்டன் கார் பந்தயத்திற்கு வரவிருப்பது பற்றி அஜித் குமார் பேசியுள்ளார்.
பிரிட்டனில் நடைபெறவுள்ள லீ மேன்ஸ் கப் தொடரில் நடிகரும் ரேஸருமான அஜித் குமாரின் அணி பங்கேற்கிறது. நாளை நடைபெறம் இந்த கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார்.
அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு செல்வதாகக் கூறப்பட்டது. மேலும், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக கார் பந்தயத் தளங்களைப் பார்வையிடும் நோக்கில் முதல்வர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் பற்றிப் பேசிய அஜித் குமார், ”முதல்வர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்வரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்றவை இந்தியாவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
Ajith Kumar has spoken about Chief Minister Vijay's upcoming visit to the car race in Britain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.