காந்தாரா சாப்டர் 1 பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஹொம்பாலே ஃபிலிம்ஸ்.
செய்திகள்

தெய்வீக வெற்றி: ரூ.500 கோடியை கடந்த காந்தாரா சாப்டர் 1!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வசூல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வசூல் ரூ. 500 கோடியை தாண்டியதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம் கடந்த அக்.2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கார்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த கதாபாத்திரம் வெளிட்யீட்டுக்கு முன்பே கவனம் ஈர்த்தது.

படத்தின் கதை சுமாராக இருந்தாலும் படத்தின் உருவாக்கம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள்.

குறிப்பாக பின்னணி இசையிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தெய்வீக சினிமாட்டிக் புயல் வசூல் வேட்டையிலும் தொடர்வதாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

The film's collection of kantara Chapter 1 has crossed Rs. 500 crore, the film's team has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT