செய்திகள்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

காந்தாரா சாப்டர் 1 படத்தில் 11 நாள்கள் வசூல் விவரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வசூல் ரூ. 650 கோடியைத் தாண்டியதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம் கடந்த அக்.2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கர்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் இந்தப் படம் அக்.2 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தின் உருவாக்கம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், பின்னணி இசை பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலக அளவில் 11 நாள்களில் ரூ. 655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளி வரை பெரும்பாலான திரைகளில் காந்தாரா திரையிடப்படும் என்பதால், விரைவில் ரூ. 1,000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kantara Chapter 1 Collection Hunt: 11 Days Details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT