அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!
அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனாலும், வித்தியாசமான தோற்றத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலில் வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
நடிகை சமந்தாவுக்கும் முக்கிய திரைப்படமாக இருந்தது. இப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததால், இதனை மறுவெளியீடு செய்ய லிங்குசாமி கடந்த ஆண்டே முடிவு செய்தார். ஆனால், வெளியாகவில்லை.
இந்த நிலையில், ரீ எடிட் செய்யப்பட்ட அஞ்சானின் புதிய வடிவத்தை வருகிற நவ. 28 ஆம் தேதி வெளியிட உள்ளதாக லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சக்தித் திருமகன் ஓடிடி தேதி!
suriya's anjaan movie rerelease date announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.