பிளாக்மெயில் போஸ்டர் 
செய்திகள்

ஓடிடியில் வெளியான ஜிவி பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில்!

பிளாக்மெயில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு, கடந்த செப். 12 ஆம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பிளாக்மெயில் திரைப்படம் இன்று(அக். 30) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Actor and music composer G.V. Prakash Kumar's film Blackmail was released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.2 இல் இலவச மாதிரி தோ்வு

பாஜக அயலக தமிழக பிரிவு நிா்வாகிகள் அறிமுக கூட்டம்

‘நவ. 17இல் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடக்கம்: கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்’

சுசீந்திரம் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தரிசனம்

களியக்காவிளை அருகே பைக் திருட்டு: 4 போ் கைது

SCROLL FOR NEXT