சிம்புவுடான படத்தில் தனுஷ் நடிப்பாரா? வெற்றி மாறன் பதில்!
சிம்பு படத்தில் தனுஷ் இணைவது குறித்து...
நடிகர் சிம்பு உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான புரமோ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகவுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை கதையைத் தொட்டு இப்படம் உருவாகவுள்ளதால் இதில் சிம்புடன் இணைந்து தனுஷ் நடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வெற்றி மாறன், “வடசென்னை திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர் சிலம்பரசனுக்கு எழுதினேன். ஆனால், தனுஷ் இணைந்ததும் வேறு கதைகளையும் உள்ளே கொண்டு வந்தேன். இப்போது, வடசென்னைக்காக முதலில் எழுதிய கதையை சிம்புவை வைத்து எடுக்கவுள்ளேன். இந்தப் படத்தில் வடசென்னை காலகட்டமும் அதன் கதாபாத்திரங்களும் இடம்பெறும். ஆனால், நடிகர் தனுஷ் இருக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், வடசென்னை கதை பின்னணியில் அன்பு (தனுஷ்) இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!
director vetri maaran spokes about silambarasan, dhanush and vadachennai movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.