ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!
நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்து...
நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
யார் இந்த அன்பறிவ் சகோதரர்கள்?
Advertisement
Advertisement
மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.
பின்னர் கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.
தங்களது முதல் படத்திலேயே கமலை இயக்குகிறார்கள். கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் 237-ஆவது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என கடந்த ஆண்டே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஷ்யாம் புஷ்கரன், அன்பறிவ் சகோதரர்கள் உடன் கமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு பதிவிட்டுள்ளது.
யார் இந்த ஷ்யாம் புஷ்கரன்?
தேசிய விருது வென்ற மகேஷின்ட பிரதிகாரம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர்தான் ஷ்யாம் புஷ்கரன்.
தொண்டிமுதலும் த்ரிஷாக்சியும், கும்பலாங்கி நைட்ஸ், மாயநதி, தங்கம் படங்களுக்கும் இயக்குநருடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.
திரைக்கதை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் ஷ்யாம் புஷ்கரன் அசத்துகிறார். கும்பலாங்கி நைட்ஸ், பிரேமலு படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதும் கவனித்தக்கது.
தக் லைஃப் சுமாரான வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Malayalam screen writer Shyam Pushkaran has written the screenplay for kamal 237th film, which is directed by anbariv brothers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.