விருஷபா படத்தின் டீசரில்.. 
செய்திகள்

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

நடிகர் மோகன் லாலின் ‘விருஷபா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ திரைப்படத்தின் டீசரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மோகன் லால் - இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் உருவாகியுள்ள புதிய படம் “விருஷபா”.

மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் படம்பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நடிகர் மோகன் லால் அரசனாக நடித்துள்ளார்.

நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (செப்.18) வெளியிட்டுள்ளனர். மேலும், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்படம், வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

The team has released the teaser of the film 'Vrusshabha' starring actor Mohan Lal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT