எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!
2021 - 2023 வரையிலான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு...
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளார்.
பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் திரைக் கலைஞர்கள் பட்டியல்
2021
எஸ். ஜே. சூர்யா
சாய் பல்லவி
லிங்குசாமி
ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் - திரைப்பட அரங்க அமைப்பாளர்
சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்
2022
விக்ரம் பிரபு
ஜெயா வி. சி. குகநாதன்
விவேகா - பாடலாசிரியர்
டைமண்ட் பாபு - திரைப்பட செய்தித் தொடர்பாளர்
டி. லட்சுமிகாந்தன் - திரைப்பட புகைப்படக் கலைஞர்
2023
கே. மணிகண்டன்
எம். ஜார்ஜ் மரியான்
அனிருத்
ஸ்வேதா மோகன்
சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார்
நிகில் முருகன் - திரைப்பட செய்தித் தொடர்பாளர்
S.J. Surya, Sai Pallavi, Manikandan to receive Kalaimamani Award
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.