ஒரே காட்சியில் பான் இந்திய சூப்பர் ஸ்டார்கள்!
ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து....
ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பான் இந்திய சூப்பர்ஸ்டார் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நடிகர் மோகன்லால் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கான தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஒரே ஒரு காட்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்கவுள்ளனராம்.
இவர்கள் அனைவரும் ஒரே காட்சியில் ஒன்றாக நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் தனித்தனிக் காட்சிகள் அசத்தலான வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
actors rajinikanth, sharukhkhan, mohanlal, shivarajkumar all in jailer 2 scene
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.