தன் மகளுக்கு நயோமிகா எனப் பெயரிட்ட ரன்தீப் ஹூடா!
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடாவின் மகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது பற்றி...
பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தன் மகளுக்கு நயோமிகா எனப் பெயரிட்டுள்ளார். ஹரியாணாவைச் சேர்ந்த ரன்தீப் ஹூடா 2001ல் தனது முதல் படத்தில் அறிமுகமாகிறார்.
ஹைவே, மர்டர் 3, பாம்பே டாக்ஸ், சர்ப்ஜித் ஆகிய படங்களின் மூலம் கவனம்பெற்றார். வலதுசாரி கொள்கைவாதியான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.
இதில் ரன்தீப் ஹூடா ’சாவர்க்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து, தானே இயக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது, மேட்ச் பாக்ஸ் என்ற ஒரு ஆங்கில படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ரன்தீப் ஹூடா தனது காதலி லின் லைஷ்ராமை கடந்த 2023ல் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு மார்ச் 10ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது, அந்தக் குழந்தைக்கு நயோமிகா எனப் பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ரந்தீப் ஹூடா, “எங்கள் உலகில் புதிய மையம் வந்துள்ளது. நயோமிகா ஹூடா - தெய்வீக முகம், சுதந்திரம், எல்லையில்லாத வானம்.
என்னை தந்தையாக்கியதற்கும் நமது குழந்தையை இந்த உலகத்துக்கு கொண்டு வந்ததுக்கும் நன்றி, லின்! சிறிய குழந்தை, வாழ்க்கை முழுவதுமான அன்பு எனக் கூறியுள்ளார்.
Randeep Hooda, Lin Laishram name their daughter Nyomica
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.