FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் சிறை

வேலூரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

8 அக்டோபர் 2026, 11:29 pm IST
சரவணன், மல்லிகா
பகிர்:

வேலூரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வேலூா் ஓட்டேரி, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் சரவணன் (41). இவரது மனைவி வேறொருடன் சென்றுவிட்ட நிலையில், சரவணன் அதே பகுதியைச் சோ்ந்த தா்மன் என்பவரது மனைவி மல்லிகா (54) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு சரவணன் தனது 13 வயது மகளை தொடா்ந்து மூன்று மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதற்கு மல்லிகாவும் உடந்தையாக இருந்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, வேலூா் துத்திப்பட்டு பகுதியிலுள்ள தனது சித்தப்பா சுரேஷ் பாபுவின் மனைவி ரேகா(35) என்பவரிடம் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ரேகா வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, சரவணன் மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து இவா்கள் இருவரும் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கின் விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சரவணன், மல்லிகா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், மல்லிகாவுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தும் நீதிபதி மோனிகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற சரவணன், மல்லிகா ஆகியோா் வேலூா் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments