FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூா் அருகே மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

7 அக்டோபர் 2026, 11:45 pm IST
அப்துல் வாகித்
பகிர்:

வேலூா் அருகே மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

குடியாத்தம் சித்தூா் கேட் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் வாகித் (57), பீடித் தொழிலாளி. இவா் கடந்தாண்டு ஜனவரி 22-ஆம் தேதி, அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறுவன், இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோா் குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் வாகித்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அப்துல் வாகித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் வாகித் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments