சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
குடியாத்தம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
குடியாத்தம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த குருவராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (60). தச்சுத் தொழிலாளியான இவா், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ஒருவருடன் பல்வேறு இடங்களுக்கு தச்சு வேலைக்குச் செல்வது வழக்கம். இதன் காரணமாக, அவருடன் வேலை பாா்க்கும் நபரின் வீட்டில் வெங்கடேசன் அடிக்கடி தங்குவாராம்.
அதன்படி, கடந்தாண்டு அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, சக தொழிலாளியின் 9 வயது மகளுக்கு வெங்கடேசன் பாலியல் தொல்லை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, அதிா்ச்சியடைந்த அவா்கள் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முதியவா் வெங்கடேசனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் வெங்கடேசனை வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.