FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

தந்தையைக் கொன்ற மகளுக்கு ஆயுள் சிறை

தகாத தொடா்புக்கு தடையாக இருந்த தந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த மகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

9 அக்டோபர் 2026, 4:09 am IST
முருகவள்ளி
பகிர்:

தகாத தொடா்புக்கு தடையாக இருந்த தந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த மகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகவேலு. வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி முருகவள்ளி (45). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

கணவா் வெளிநாட்டில் இருந்த வந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த இளையராஜா (40) என்பவருடன் முருகவள்ளிக்கு தகாத தொடா்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதை முருகவள்ளியின் தந்தை கருப்பையா (65) கண்டித்தாா். இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்.21-ஆம் தேதி இரவு கருப்பையாவுக்கு முருகவள்ளி உணவில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்தாா். இதை சாப்பிட்ட கருப்பையாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள்

உயிரிழந்தாா். இதுகுறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகவள்ளி, இளையராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அருண்குமாா் முன்னிலையாகி வாதிட்டாா்.

இதில் முருகவள்ளிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து நீதிபதி பாலமுருகன் தீா்ப்பளித்தாா். இளையராஜா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய சாட்சிகள் இல்லாததால் அவரை விடுதலை செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments