ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப்படங்கள்! நம். 1 இவர்தான்!
ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான திரைப்படங்கள் குறித்து...
பிரபல திரைப்படங்களின் ஓடிடி விற்பனைத் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின் உலகம் முழுவதும் வணிக ரீதியாக பெரிய பாய்ச்சலும் நிகழ்ந்துள்ளன. நட்சத்திர நடிகர்களின் பட்ஜெட் மற்றும் வணிகத்திற்கு ஏற்பட இந்தியாவிலும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக ஓடிடி உரிமம் பெற்ற திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன.
முக்கியமாக, உலகளவில் பல கோடி சந்தாதாரர்களை வைத்திருக்கும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஓடிடிகளே இந்திய மார்க்கெட்டிலும் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ்த் திரைப்படங்களில் அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதில், நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் நிறுவனத்தால் ரூ. 160 கோடிக்கு வாங்கப்பட்டு முதலிடம் பிடித்துள்ளதாம்.
மேலும், ரஜினியின் கூலி ரூ. 120 கோடி (அமேசான் பிரைம்), கமல் ஹாசனின் தக் லைஃப் ரூ. 110 கோடி (நெட்பிளிக்ஸ்) விஜய்யின் லியோ ரூ. 110 கோடி (நெட்பிளிக்ஸ்), ரஜினியின் ஜெயிலர் ரூ. 100 கோடி (பிரைம்) ஆகியவை ஓடிடி நிறுவனங்களால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களாகும்.
ஆச்சரியமாக, நடிகர் ரஜினிகாந்த்தின் 3 திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே ஓடிடிகளால் வாங்கப்பட்டுள்ளன. இதனால், ஓடிடியிலும் சூப்பர்ஸ்டாராக ரஜினியே உள்ளார்!
Information regarding the OTT sales figures of popular films has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.