FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் பார்க்க வேண்டிய ரொமான்டிக் படங்கள்!

ஓடிடியில் காண வேண்டிய ரொமான்டிக் திரைப்படங்கள் குறித்து....

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:27 pm IST
ஓடிடியில் பார்க்க வேண்டிய ரொமான்டிக் படங்கள்! - படம்: எக்ஸ்
பகிர்:

ஓடிடி தளங்களில் காண வேண்டிய காதல் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சீதா ராமம்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க, ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

லவ் டுடே

பொழுதுபோக்கு காதல் திரைப்படமான லவ் டுடே படத்தில் பிரதான பாத்திரங்களில் பிரதீப் ரங்கநாதன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

வித் லவ்

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வித் லவ்.

இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணலாம்.

மாயநதி

ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற காதல் திரைப்படம் மாயநதி. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓ காதல் கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மெனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் ஓ காதல் கண்மணி.

இந்தப் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் பார்த்து மகிழலாம்.

கீதா கோவிந்தம்

பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் கீதா கோவிந்தம்.

கோபி சுந்தர் இசையமைப்பில் வெளியான "இன்கேம் இன்கேம் காவாலே" பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்தப்படம் ஜீ5 மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

காதலிக்க நேரமில்லை

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன் மற்றும் நித்யா மெனன் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பார்க்கலாம்.

லவ் ஓ லவ்

லவ் ஓ லவ் போஸ்டர் - படம் - எக்ஸ்

தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக நாகா துர்கா நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

எல்ஐகே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.

இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

லவ் மேரேஜ் 

அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் மேரேஜ்.

இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

summary

Let's take a look at the romantic movies worth watching on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments