எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டிசி! நாயகனாக வெல்வாரா லோகேஷ் கனகராஜ்?
லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படம் குறித்து...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான டிசி திரைப்படம் ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் டிசி. முழு ஆக்ஷன் திரைப்படமான கேங்ஸ்டராக தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷும் சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத்தின் 15 பாடல்கள் அடங்கிய ஆல்பம் பெரிய ஹிட் அடித்துள்ளதால் வன்முறைக் கதைகளை விரும்பும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Advertisement
Advertisement
லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகள் பேசப்படும் என்பதால் அவர் நாயகனாக நடித்துள்ள டிசியிலும் அப்படி ஏதாவது இருக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் வன்முறைப் படங்களால் அறியப்பட்டவர் என்பதால் ஏ சான்றிதழுடன் 2.23 மணி நேரம் ஓடக்கூடிய டிசி முதல் நாள் வசூலாக சில கோடிகளை ஈட்டலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
The film DC, featuring director Lokesh Kanagaraj in an acting role, is set to release in theaters on August 7.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.